சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. தமிழில் பல ஆக்ஷன் படங்கள் உருவானதற்கு காரணமே, ஒரு காலத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் படங்கள் தான்.
அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி வந்த இந்த பெரிய மனுஷன் தற்போது முரட்டு கிளாமர் படங்களை இயக்கி வருகிறார். அவரது படங்கள் ஓடிடியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாகவும் இளசுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் நடிகை சோனியா நரேஷின் தொடைக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைபடத்தை பெருமையாக பகிர்ந்துள்ளார்.
கொடுமை என்ன என்றால், இந்த புகைப்படத்தை சக நடிகை நைனா கங்குலி எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ள ராம்கோபால் வர்மா “நீங்கள் ஒரு நல்ல நடிகை மட்டுமின்றி நல்ல புகைப்படக் கலைஞரும் கூட” என்று நைனா கங்குலியை புகழ்ந்துள்ளார்.
இணைய தளத்தில் இந்த புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பும், பெரும் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.