“நம்ம மைண்ட் வேற அங்க போகுதே..” – வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் – புலம்பும் ரசிகர்கள்..!

 

ஒரு காலத்தில் சீரியலில் நடிக்கும் நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் . அப்படியே நடித்தாலும் அண்ணி தங்கை வேடங்கள் மட்டுமே கொடுப்பார்கள். 

 

அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகிறார். 

 

அவருக்குப் பிறகு சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். 

 

அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார். சன் டிவியில் ஒளிபரப்பான ” தெய்வமகள் ” சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். 

 

அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார். 

 

 

இப்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் அவர் சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டவர். அதையடுத்து இப்போது சில நாட்களாக அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

 

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.சின்னத்திரையில் பிரபலமான நடிகை வாணி போஜன், “ஓ மை கடவுளே மற்றும் லாக்கப்” போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். 

 

இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.இப்போது நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதால் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார்.

 

 

இதுகுறித்து அவர்,சினிமாவில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இனி டிவி சீரியல்களில் நடிக்க நேரம் இருக்காது. 

 

ஏனென்றால் சீரியல்கள் ஆண்டுக்கணக்கில் ஓடும், இனி ஆண்டுதோறும் நடிக்க முடியாது.தற்போது 4 படங்களில் நடிக்கிறேன். இவற்றில் விதார்த் உடன் நடிக்கும் படம் ரொம்பவே வித்தியாசமானது. 

 

வெளிமாநிலம் என்றாலும் தமிழ் நன்றாக பேசுவேன். இதை கடவுள் கொடுத்த வரமாக எண்ணுகிறேன் என்று வாணிபோஜன் கூறினார். தற்போது, சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

 

இந்த படத்தின் பணிகள் முடிந்த நிலையில், படகுழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வாணி போஜன்.

இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அங்க போகுதே என்று புலம்பி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam