மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.
பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல், டிரைவிங் லைசன்ஸ் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோருடன் நடித்த ‘டிரைவிங் லைசென்ஸ்’ படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தார் மியா .
இதில் சத்யா ஹீரோவாக நடித்தார். இதையடுத்து விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பக்கத்து வீட்டு பெண் போல முகம், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் மட்டும் என திரையுலகை ஒரு கலக்கு கலக்கினார் அம்மணி. இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் கண்மணிலா, காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் என நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்புகள் தடைபட்டு தற்போது மீண்டும் தொங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ் லெஸ் உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அடி பொலி.. மியாவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்..