“சூரரை போற்று” அபர்ணா பாலமுரளி அடுத்து நடிக்கும் படத்தில் “ஹீரோ” யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. 

 

இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிப்பதோடு இயக்கவும் உள்ளார்.மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

 

ஆர்.ஜே., நகைசுவை நடிகர், ஹீரோ என தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட பாலாஜி சென்ற ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். 

 

ஓடிடி வெளியீடாக ரிலீசான இந்தப்படம் ரசிகர்கள் ,மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். 

 

இந்நிலையில் இந்த படத்தில் பாலாஜி ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அபர்ணா, சுதா கொங்கரோ இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

 

இந்தப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அபர்ணாவை பிரபலமாக்கியது. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி ஜோடியாக இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *