மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினியின் பேட்ட படத்தில் தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தவர் தற்போது தனுசுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தமிழில் புதிய படங்களில் கமிட்டாகாத நிலையில் தற்போது ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
இதே படத்தில் பாலிவுட் நடிகை ஆலியாபட், ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், மாளவிகா மோகனன் இன்னொரு நாயகியாக நடிக்கிறாரா? இல்லை வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆனால் வெகு விரைவிலேயே இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை டைரக்டர் ஷங்கரும், தயாரிப்பாளர் தில்ராஜூவும் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.
தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கும் ரசிகர்கள் நிறைய ஏடாகூடமான கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா, குட்டியான ட்ரவுசர் என படு சூடாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அக்மார்க் நாட்டுக்கட்ட, காட்டு தேக்கு என ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.