சில வருடங்களுக்கு முன்பு வந்த டப்ஸ்மாஷ் என்ற செயலி பலதரப்பு மக்களையும் கவர்ந்தது. இது மெல்ல மெல்ல வளர்ந்து மியூசிக்கலி.. டிக் டாக் என்று விஸ்வரூபம் அடைந்தது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற முன்னணி சமூக வலைதலங்கலையே ஆட்டம் காண வைத்தது டிக் டாக்கின் அபார வளர்ச்சி.
இந்தியார்கள் டிக் டாக்கில் நாளொன்றுக்கு சரா சரியாக 30 நிமிடம் முதல் 4 மணி நேரம் வரை பொழுதை கழிக்கிறார்கள் என்று மார்தட்டியது டிக் டாக் நிறுவனம். சாதி சண்டையில் ஆரம்பித்து, சக்களத்தி சண்டை வரைக்கும் டிக்டாக்கில் நடந்தது.
ஒரு பக்கம் நடிப்புதிறைமையை வெளிப்படுத்த நல்ல தளம் என்று என்னதான் கூறினாலும் டிக் டாக் என்றாலே சமூகத்தின் சீரழிவுக்கான வழி என்று தான் பலரும் நம்பினார்கள்.
இந்நிலையில், கடந்த வருடம் சென்ற ஆண்டில் ஏற்பட்ட இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது இந்தியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டது அதன் வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
குறிப்பாக டிக்டாக் பயனாளர்களும் ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்தனர். இந்தியாவில் டிக்டாக் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்தத் தடையால் டிக்டாக் நிறுவனத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. ஏனெனில், உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் பயனர்கள் அதிகம்.
டிக் டாக் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னணி சமூக வலைதளங்கலான யூட்யூப்,பேஸ்புக் என பல தளங்கள் டிக் டாக் போலவே இருக்கும் அம்சங்களை சேர்த்து கொண்டதன் விளைவு இப்போது டிக் டாக் கூத்துக்கள் சமூக வலைதளங்களில் அரங்கேறி வருகின்றது.
அந்த வகையில், பள்ளி வகுப்பறை ஒன்றில் ஐயா கலாம் அவர்களின் புகைப்படத்தை மாட்டிக்கொண்டு மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆசிரியையின் ஒரு வீடியோ செம்ம வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன வேணா பண்ணிட்டு போங்க.. மொதல்ல ஐயா கலாமின் புகைப்படத்தை எடுத்து விட்டு அப்புறம் பண்ணுங்க என்பதில் ஆரம்பித்து வண்டை வண்டையாக வசை பாடி வருகிறார்கள்.
ஆனால், இது நிஜ பள்ளி இல்லை என்பதும், பள்ளி போன்று செட் போட்டு நடக்கும் படப்பிடிப்பு தளத்தில் தான் இந்த கூத்து அரங்கேறியுள்ளது என்பதும் வீடியோவை பார்க்கும் போதே தெரிகின்றது.
ஆனாலும், இந்த கன்றாவி நடக்கும் இடத்தில் ஐயா கலாமின் புகைப்படம் இருப்பது உறுத்தலாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.