தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை அதன்பின்னர் அவர் தெலுங்கில் நடித்து பிரபல நடிகையானார்.
இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் நடிக்கவுள்ளார் அம்மணி. இந்த படத்தில் பூஜையில் கலந்து கொள்ளாதது பற்றி பல சர்ச்சைகள் கிளம்பின. இதனை தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்பதால் விஜய் பட பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை என நடிகை பூஜா ஹெக்டே கூறியுனார்.
மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா. இசை – அனிருத்.
இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாததற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்தார் நடிகை பூஜா ஹெக்டே.
இந்நிலையில், தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.