தங்கைக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்து இருக்கின்றார்.
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு அனைத்தும் தேங்கி நிற்கின்றது, நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து புது பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இன்டீரியர் டெக்கரேஷன் மூலமாக வீட்டை அலங்கரித்து தருவது மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர்.
இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பரப் படத்தில் தனது கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் ஜெனிலியா, அசின் போன்ற பல நடிகைகள் சினிமா துறையை விட்டு விலகி விட்டனர்.
தற்போது காஜலும் சினிமா தொழிலை விட்டு விலகி புது தொழிலில் ஈடுபட்டு இருக்கிறாரா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், பிசினஸ் டெவலப்மெண்ட்காக கவர்ச்சி காட்டி விளம்பரம் கொடுக்க தயாராகிவிட்டார்.
அந்த வகையில், தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி சூடான கவர்ச்சி போஸ்களை கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி கவர்ச்சி காட்டுறீங்க உங்க புருஷன் எதுவும் கேக்க மாட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.