நடிகை திரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை.
ஒரு கட்டத்தில் கமர்சியல் நடிகையாக வலம் வந்த திரிஷா தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து கர்ஜனை, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. சமீபகாலமாக திரிஷாவின் நடவடிக்கைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு புதிர் போடும் விதமாக அமைந்துள்ளது.
தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. ராணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து திடீரென சமூக வலைதளங்களில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்து போவதாக அறிவித்தார். ஆனால் இருவருக்குள்ளும் நட்பு மட்டும்தான் இருக்கிறது என தற்போது வரை கூறி வருகிறார் திரிஷா.
அதுமட்டுமில்லாமல் இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.
அந்தவகையில் மீண்டும் சினிமாவில் பழையபடி தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ள த்ரிஷா அதற்கு அச்சாரம் போடும் வகையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.