பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் ஜல்லிக்கட்டு வீராங்கனையாக மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய புகழை தானே கெடுத்து கொண்டு மிகவும் மோசமான போட்டியாளராக பெயர் பெற்றார்.
இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘அம்மன் தாயே’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் ஜூலி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. சில திரைப்படங்களில் நடித்தார்.
ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், சேலையில் இடுப்பு தெரிய கவர்ச்சி காட்டி சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் “என்னமா இப்படி இறங்கிட்டீங்க..? – சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவீங்க போல… அந்த குட்டி தொப்பை தான் உங்களோட கிளாமர் அப்பீல்” என கண்ட மேனிக்கு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.