பிரேமம் எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சாய்பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதிலும் தெலுங்கு சினிமாவில் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. சமீபகாலமாக முன்னணி நடிகர்களை விட சாய்பல்லவி நடிக்கும் படங்களின் பாடல் வீடியோக்கள் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை குவித்து வருகிறது.
சாய்பல்லவி நடனமாடினால் மில்லியன் பார்வையாளர்கள் தானாம். மேலும் சாய் பல்லவி நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது தெலுங்கு சினிமாவின் நம்பிக்கையாகும்.
இதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள். ஒருமுறை சாய்பல்லவி தன்னுடைய இளம் வயதில் உள்ளாடைகள் தெரிய சால்சா நடனமாடிய வீடியோ சமீபத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் வைரல் ஆனது.
நம்ம சாய்பல்லவியா இப்படி என அனைவரும் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் கதகளி ஆடியிருந்தார். சல்சா நடனம் அப்படித்தான் ஆட முடியும், புடவை கட்டிக் கொண்டு ஆட முடியுமா? எனவும் சாய்பல்லவி ரசிகர்கள் சண்டைக்கு சென்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாடை அணிந்து மேலாடை அணியாமல் ஷால் போட்டு மறைத்து இலைமறை காயாக கவர்ச்சி காட்டியுள்ளார்.
பட வாய்ப்புகளுக்காக இப்படி குறைந்த உடையில் புகைப்படம் வெளியிட வேண்டுமா என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.