அட்டகத்தி தினேஷ் நடித்த “ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் . அதன் பின்னர் 2017 இல் வெளியான விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
சமீப காலமாக இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.ஒரு நாள் கூத்து புகழ் அடியே அழகே நாயகி நிவேதா பெத்துராஜ் படங்களே இல்லாமல் இருப்பது போலவே இருந்தாலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அதில் முதலாவதாக வர இருப்பது திமிரு புடிச்சவன். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வர உள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்தை வைத்து நம்பியார் என்ற படத்தை இயக்கிய கணேஷா இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியும் நிவேதா பெத்துராஜும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். நிவேதா பெத்துராஜ் மடோனா என்ற காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
படம் முழுவதும் காக்கி உடையில் புல்லட் ஓட்டியபடி நடித்துள்ள நிவேதா பாடல் காட்சிகளில் படு செக்சியாக தோன்றி உள்ளார். தற்போதெல்லாம் கொஞ்சம் தாராளமாகவே ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். மேலும் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் அவருடைய வழக்கமாக மாறிவிட்டது.
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் இளசுகளின் நெஞ்சை கொள்ளையடித்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.