தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கும்கி படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் லட்சுமி மேனன்.
ஒரு வருடத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகையாகவும் வலம் வந்தார். இவரின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகளே கொஞ்சம் ஆடிப் போய் விட்டனர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வெற்றிப் படங்களையும் கொடுத்து வந்தார்.
குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, கொம்பன் போன்ற தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் உச்ச நடிகை ரேஞ்சுக்கு மிக வேகமாக உயர்ந்தார். அந்த பூரிப்பில் உடல் எடையும் சற்று கூடிவிட்டது. இதனால் ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆண் போல இருக்கிறார் என கிண்டல் செய்தார்கள்.
அந்த நேரத்தில் வெளிவந்த ரெக்க படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு சில படங்களில் நடித்து வந்தாலும் தற்காலிகமாக நடிப்புக்கு பிரேக் விட்டுவிட்டார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து தமிழ் ரசிகர்களை கவர்வதற்காக பிகினி காட்சியில் நடிக்க தயாராகி விட்டாராம்.
நீச்சல் கற்றுக்கொள்ளும் போது பிகினி உடையில் வலம் வந்ததால் எனக்கு அது ஒன்றும் தவறாக தெரியவில்லை என முடிவெடுத்து விட்டாராம். இதற்கு தானே இவ்வளவு நாள் காத்திருந்தோம் எனும் அளவுக்கு தமிழ் ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு வாயை பிளந்து வருகின்றனர்.
விரைவில் நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கப்போகிறார் லட்சுமி மேனன்.