கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அழகிய தமிழ்மகன் காதல் கலந்த திகில் திரைப்படமாகும். எஸ். கே. ஜீவா எழுத்தில் ஸ்வர்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை பரதன் இயக்கியிருந்தார்.
விஜய் அவரது வாழ்நாளில் முதன் முறையாக இப்படத்தில் தான் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். மேலும் ஸ்ரேயா சரண். நமிதா மற்றும் சந்தானம் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இடையமைபாளர் எ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதே தலைப்பில் இப்படம் மலையாளத்திலும் ஹிந்தியில் ”சப்சே படா கில்லாடி” என்ற தலைப்பிலும் தெலுங்கில் ”மஹ முதுரு” என்ற தலைப்பிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு இதுவே கடைசி படமாக ஆகிப்போனது. படம் வெளியாகி மோசமான திரைக்கதையால் மண்ணை கவ்வியது.
படத்தால் சிறைக்கு சென்ற தயாரிப்பாளர்
சமீபத்தில் கூட, அழகிய தமிழ் மகன் படத்தை வெளியிட விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஒரு
கோடி பெற்று மோசடி செய்ததாக எஸ் ஏ சந்திரசேகர் வழக்கு தொடர்ந்த நிலையில்,
இந்த வழக்கில் பட தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து
சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அழகிய தமிழ் மகன்படத்தால் பணத்தை இழந்தது மட்டுமில்லாமல் ஜெயிலுக்கும் சென்று வந்து விட்டார் தயாரிப்பாளர். இப்படத்தில் ஹீரோ ஹீரோயினை தாண்டி நம் மனதில் இடம் பிடித்தது குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சிறுமி நிவேதிதா தான்.
படத்தில் சில நிமிட காட்சியிலே மட்டும் இவர் வந்திருந்தாலும் முக்கியமான ஒரு கதாபாத்திரம். இந்த சிறுமியின் இறப்பில் தான் நாயகனுக்கு தனக்குள் இருக்கும் சக்தியை பற்றி தெரியவரும்.
இந்நிலையில்
படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், நாம் குழந்தையாக பார்த்த
சிறுமி நிவேதிதா தற்போது நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு
மாறியுள்ளார்.