ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான போதும், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ஜூலியை மக்கள் மத்தியில் இன்னமும் பிரபலமாக்கியது. அந்நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம், அவருக்கு கெட்ட பெயரையே வாங்கித் தந்தது.
ஆனபோதும் அவர் எதிர்பார்த்தபடியே அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது. அதோடு சில படங்களில் நாயகியாக நடிக்கவும் செய்தார்.
ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் இதுவரை ரிலீசாகவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து புதிய வாய்ப்புகளைத் தேடி வரும் ஜூலி, வித்தியாசமான போட்டோஷூட்களை நடத்தி அசத்தி வருகிறார்.
சமீபத்தில் உடலில் மெழுகு பூசிக் கொண்டு அவர் நடத்திய போட்டோஷூட் ரசிகர்களை அதிர வைத்தது. இப்படி விபரீதமாக எல்லாம் போட்டோஷூட் தேவையா என வழக்கம் போலவே நெட்டிசன்களிடன் திட்டு வாங்கினார்.
இந்நிலையில் தற்போது வித்தியாசமாக சிகப்பு நிற புடவை அணிந்து கொண்டு அழகுகளை அசைத்து ஹாட்டான வீடியோ சிலவற்றை வெளியிட்டுள்ளார் ஜூலி.
ரசிகர்களுக்கு கோடை வாழ்த்துக்களைக் கூறி இந்த வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார். சில் அவுட் படங்களாக இருந்தாலும் அதிலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் ஜூலி போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.