விதவிதமான மாடர்ன் உடையில், வகைவகையான புகைப்படங்களை பதிவிட்டு… கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வரும் சின்னத்திரை அனுஷ்கா ஷிவானி தற்போது, மாலத்தீவிற்கு சென்று கவர்ச்சி அளப்பறையை துவங்கியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் , கலந்து கொள்வதற்கு முன்… தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தையாவது வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்கள் கண்களுக்கு விருந்து கொடுத்து வந்த ஷிவானி, மீண்டும் தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
ஷிவானி வெளியிடும் புகைப்படங்களை பார்த்து, சின்னத்திரை அனுஷ்கா போல் உள்ளதாக நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.குட்டையான உடையில் அசால்டாக கையை தூக்கி, இடையை காட்டியபடி வெளியிடும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
கவர்ச்சி களத்தில் இறங்கி பட வாய்ப்புக்கு அடிபோட்டு வரும், ஷிவானி தற்போது மாலத்தீவுக்கு பறந்துள்ளார்.
மாலத்தீவு சென்றுள்ள ஷிவானி, அங்கு உள்ள நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்தப் புகைப்படத்திற்கு வழக்கம்போல் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.