“அந்த கண்ணு.. அந்த லிப்சு…” – ஒத்த செல்ஃபியில் இணையத்தை சூடாக்கிய “அசுரன்” அம்மு அபிராமி..!

 

விஜய் நடித்த பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

 

இவர் நடித்த ராட்சசன் மற்றும் அசுரன் ஆகிய படங்கள் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது.இந்த படத்தில் தைரியமான பெண்ணாகவும், பாவமான பெண்ணாகவும் நடித்து வித்தியாசம் காட்டியிருந்தார். 

 

பெண்களுக்காக வழங்கப்படும் JFW விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான விருது இவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்ததிருந்தார் அம்மணி. 

 

 

அதில், “எனக்கு தொடர்ச்சியான காய்ச்சல் இருந்ததால் பரிசோதித்து பார்த்தேன். கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டேன். உறுதியுடன் கொரோனாவிலிருந்து மீண்டு வருவேன்” என்று தெரிவித்திருந்தார். 

 

 

அதனை தொடர்ந்து, கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார். லாக்டவுன் காரணமாக சுணங்கி கிடந்த படப்பிடிப்புகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள நிலையில் தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam