சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.
சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார்.
இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.
சினிமா நடிகைகளுக்குப் போட்டியாக அல்ல, அதற்கும் மேலாகவே டி.வி. சீரியல்
நடிகைகள் கவர்ச்சிக் களத்தில் குதித்து கதிகலக்கி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் அச்சாரம் போட்ட டி.வி.நடிகை 19 வயதே ஆன ஷிவானி நாராயணன்தான்.
ஆனால் இப்போது கிளாமர் வாரில் கலக்கி வருபவர்கள் எல்லோருமே கல்யாணம்
ஆனவர்கள்.சில சீரியல் நடிகைகள், உடன் நடிக்கும் நடிகரைக் காதலித்து கல்யாணம் செய்து
கொள்கிறார்கள். சிலரோ தொழிலதிபர்களைக் கரம்பிடித்து வாழ்கிறார்கள்.
சீரியல்
நடிகையை கல்யாணம் பண்ணிய பிறகு, அந்த நடிகருக்கு சீரியல் வாய்ப்புகள்
குறையத் தொடங்கினாலோ. தொழிலதிபர்களுக்கு தொழில் டல்லடிக்க ஆரம்பித்தாலோ,
அல்லது பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு
சிக்கல்களாலும், குடும்பக் கஷ்டத்தைப் போக்க மீண்டும் நடிக்க வருகிறார்கள்.
அந்தவகையில்,மீண்டும் சீரியலில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நீபா சமீப காலமாக தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் அப்லோடி வருகிறார்.
அந்த வகையில், தற்போது “யார பாத்துடா லூசுன்னு சொல்லுற… நீதாண்டா லூசு..” என்று OKOK படத்தில் ஹன்ஷிகா பேசும் ஒரு வசனத்தை என்று டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..