“ப்ப்பா.. – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – மெழுகு சிலை போல நயன்தாரா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன்ராஜா இயக்க, சிரஞ்சீவி நடிக்கிறார். தற்போது ஆச்சார்யா படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வரும் சிரஞ்சீவி அப்படத்தை முடித்ததும் லூசிபர் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருந்தார். மோகன்ராஜாவும் பிரீபுரொடக்சன்ஸ் பணிகளில் தீவிரமடைந்திருந்தார். 

 

ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா இரண்டாவது அலை பரவிக்கொண்டிருப்பதால் இப்போது லூசிபர் படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டனர். மேலும், இந்த படத்தில் நடிக்க முன்பு நயன்தாராவை அணுகியபோது கால்சீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. 

 

ஆனால் இப்போது லூசிபர் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தள்ளிப்போவதால், மீண்டும் நயன்தாராவை மோகன்ராஜா அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோகன் ராஜா ஏற்கனவே தனது தனி ஒருவன், வேலைக்காரன் படங்களில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஏற்கனவே இரண்டு காதல் தோல்விகளை கண்ட நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 

 

 

நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்த விஷு வருடப்பிறப்பை கேராளவில் கொண்டாடிய நயன்தாரா கேரள பாரம்பரிய உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam