த்ரிஷா தமிழில் நாயகியான அடுத்த வருடமே தெலுங்கில் நடித்தார், படம் வர்ஷம். அவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதை இப்படம் வாங்கித் தந்தது. அதன் பிறகு 2010 வரை தொடர்ச்சியாக தெலுங்கில் நாயகியாக நடித்தார். எல்லாம் முன்னணி நாயகர்களுடன்.
அதில் அத்தடு போன்ற பம்பர் ஹிட் படங்கள் அடக்கம். 2010-க்குப் பிறகு தெலுங்கில் அவர் நடிக்கும் வேகம் குறைந்தது. 2015-ல் லயன் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்தார்.
தெலுங்கின் சூப்பர் சீனியர் பாலகிருஷ்ணா. அவருடன் நடித்த பிறகு இளம் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகி வாய்ப்பு கிடைப்பது அரிது. த்ரிஷாவுக்கும் அப்படியே நிகழ்ந்தது. முப்பத்தைந்துக்கு மேல் வயது, 18 வருடங்களுக்கு மேல் அனுபவம்.
சீனியரான த்ரிஷாவை துக்கடா வேடத்தில் நடிக்க வைக்கவே தெலுங்கு திரையுலகு விரும்பியது. அதனால், தெலுங்கில் நடிப்பதை தவிர்த்தார். அவர் கடைசியாக நடித்தது, நாயகி மையப்படமான நாயகி.
படம் அட்டர் பிளாப். தெலுங்கில் உதிரி வேடங்களே வருவதால், அங்கு நடிப்பதில்லை என்று த்ரிஷா முடிவெடுத்ததாகவும், அதன் காரணமாகவே அவர் சிரஞ்சீவியின் ஆச்சார்யாவில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் நாயகிகள். இவர்களுடன் நடிக்கையில் தனக்கு முக்கியத்துவம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் த்ரிஷா ஆச்சார்யா படவாய்ப்பை மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த 19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா தன்னுடைய வசீகரத் தோற்றத்தாலும் அபாரமான நடிப்பாற்றலாலும் தமிழ் திரை உலகை அலங்கரிக்கும் திரிஷா கவர்ச்சி காட்டவும் தடை சொன்னது கிடையாது. கதைக்கு தேவையோ. இல்லையோ.. தன்னுடைய பங்கை சரியாக செய்து விடுவார் அம்மணி.
அந்த வகையில், தெலுங்கு படம் ஒன்றில் டூ பீஸ் உடையில் கடற்கரையில் படு சூடாக போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இங்கே.