ரஜினியின் காலா படம் மூலம் கோலிவுட் வந்துள்ளவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. காலாவின் முன்னாள் காதலி ஜரீனாவாக அம்சமாக நடித்திருந்தார் ஹூமா.
தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடித்துவிட்டார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வாசேபூர், பத்லாபூர் மற்றும் ஜாலி எல்எல்பி 2 போன்ற பல படங்களின் மூலம் புகழ் பெற்றவர் ஆவார்.
நடிப்பில் வியக்க வைக்க வேண்டுமா, அதிரடி கவர்ச்சி காட்ட வேண்டுமா, எதுவானாலும் ஓகே, என்று இறங்கி அடிப்பவர் ஹுமா.இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது. ஆம், தல அஜீத் நடித்த பில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக இவரை தான் முதலில் கேட்டனர்.
ஆனால் இவரால் நடிக்க முடியாமல் போகவே தான் அந்த வேடத்தில் பார்வதி ஓமனக்குட்டன் நடித்தார். இப்பொழுது ஐந்து ஆண்டுகள் கழித்து தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக. காலா படத்தில் சூப்பர்ஸ்டாரின் ஜோடியாக சரினா என்ற வேடத்தில் நடித்திருந்தார் ஹுமா குரேஷி.
நாற்பத்தி ஐந்து வயதான குப்பத்து பிள்ளைகளுக்கு உதவி செய்யும் ஒரு தன்னார்வலராக நடித்திருந்த ஹுமா, காலா படத்தின் பிளாஷ்பேக் பகுதிகளில் ரஜினியின் காதலியாக தோன்றினார். இவர்கள் இடையே பல காதல் காட்சிகளும், ஒரு ரொமான்டிக் பாடலும் இடம்பெற்றது.
இந்த நிலையில், ஹுமா குரேஷி சில மாதங்களுக்கு முன்பு எடுத்த படு
கவர்ச்சியான போட்டோ ஷுட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
’காலா’ படத்தில் ரொம்பவே ஹோம்லியான வேடத்தில் அழுத்தமாக நடித்த இவரது
இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக
அதிர்ச்சியாகிவிடுவார்கள் என்பது உறுதி.