ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த கோபிகாவின் கேரியர் கிராப் படிப்படியாக உயரத்தைத் தொட்டது. கனா கண்டேன் படத்தில் லேசு பாசாக கவர்ச்சி காட்டப் போய், விமர்சனத்துக்கு ஆளானார் கோபிகா. இதனால் விசனப்பட்ட கோபிகா தமிழைக் குறைத்துக் கொண்டு தாயகமான மலையாளத்திற்கே திரும்பினார்.
மலையாளத்தில் முழு மூச்சாக நடித்து வந்த அவர் இடையில் எம் மகன், வீராப்பு என தமிழிலிலும் தலை காட்டினார்.பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து வினவிய போது, நடிகை என்றாலே கவர்ச்சி தானா. வேறு எதுவும் தெரியாதா.
இதுவரை எந்த படத்திலும் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை வேடம் என்பதால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று யார் சொன்னது. நடிகை என்றாலே கவர்ச்சி என்ற மாயையிலிருந்து ரசிகர்களை வெளியே கொண்டுவர வேண்டும். அதற்கு எனக்கு வெள்ளித்திரையில் அமைந்துள்ள வேடம் பெரிதும் உதவும் என்றார்.
விமான பணிப்பெண்ணாக வேண்டும் என்ற ஆசை கொண்ட இவருக்கு கடந்த 2002ம் ஆண்டு பிரணயமணித்துவல் என்ற மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் கடந்த 2008ல் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பின் சில தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், குழந்தைளுடன் அதே அழகில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் பொதுவாக நடிகைகள் திருமணம் ஆனதும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி விடுவார்கள். ஆனால், இவர் இன்னும் அப்படியே இருக்கிறாரே என்று வாயை பிளந்து வருகிறார்கள்.