தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதற்குப் பிறகு “அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக துக்ளக் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அரண்மனை, மேதாவி, சைத்தான் கா பச்சா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது, ‘அந்தாதூன்’ படத்தின் மலையாள ரீமேக்கில் ப்ரித்விராஜூக்கு நாயகியாக நடிகை ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அந்தாதூன்’ படத்தின் மலையாள ரீமேக் பணிகள் தற்போது மும்முராக நடைபெற்று வருகின்றன. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில், ஒரு பேட்டியில் நான் சைவத்துக்கு மாறி விட்டேன் என கூறியிருந்தார் அம்மணி. மேலும், ஒரு ஆயுர்வேத புத்தகத்தை லாக்டவுன் காலத்தில் படித்தேன். நான்-வெஜ் சாப்பிடாமலேயே ஒருவர் தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிந்து கொண்டேன்.
ஆரம்பத்தில் அதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அதை பின்பற்ற ஆரம்பித்ததும் முழுவதுமாக பலனளித்ததைப் பார்த்தேன். சைவ உணவு எனது உடலை மட்டுமல்ல எனது மனநலத்திலும் நலமாக உணர்ந்தேன் என தெரிவித்திருந்தார்.
பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் இவர் தற்போதெல்லாம் வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,”கோடை வெயிலை சமாளிக்க சட்டையை கழட்டிட்டிங்களா..?” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.