தமிழ் திரையுலகிற்கு பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி வருவது வழக்கம், ஆனால், அப்படி அறிமுகமாகின்றவர்களில் சிலர் மக்கள் மனதில் இடம்பிடித்து ஹிட்டுக் கொடுப்பதும் சிலர் படவாய்ப்பில்லாமல் சினிமாத்துறையை விட்டு விலகுவதும் யாவரும் அறிந்ததே.
அந்த வகையில் 2008ம் ஆண்டு வெளிவந்த ”காதலில் விழுந்தேன்” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சுனைனா. இப்படத்தினைத் தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி ,நீர்ப்பறவை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பதும் தெரிந்ததே.
இதன் பின்பு படவாய்ப்புகள் குறைந்த காரணத்தால் ‘சமர் ,தெறி’ போன்ற படங்களில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தார்.அதன்பிறகு அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ”சில்லு கருப்பட்டி” படத்திற்கு நிறைய விருதுகள் எல்லாம் கிடைத்தது.
மேலும் கடந்த சில வருடங்களாக சுனைனா நடிகர் கிருஷ்ணாவை டேட்டிங் செய்வதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாகவும் வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், இது பற்றி சுனைனா தரப்பில் விசாரித்த போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் என்னமே இல்லை என்று அசால்டாக கூறுகிறார். இன்று (ஏப்ரல் 17) சுனைனாவின் 32வது பிறந்தநாள்.
இதனையொட்டி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவருடைய கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் வட்டமிட்டு கொண்டிருகின்றன.
அந்த வகையும், வெறும் முண்டா பனியன், லோயர்ஸ் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் அவரது புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.
இதனை பார்த்த சிங்கிள் பசங்க சுனைனா-வா இது..? இப்படி எல்லாம் போஸ் கொடுத்தால் நாங்க எப்படி தூங்குறது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.