பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது.
அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 , துல்கர் சல்மான் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போதும் எதையேனும் பதிவிட்டு வரும் அவர் தற்போது தங்க நிற புடவை லோ நெக் ஜாக்கெட் என படு சூடாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், தங்க சிலை.. செம்ம ஹாட் என்று உருகி வருகிறார்கள்.