கவர்ச்சியாய் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் நான் சொன்னதில்லை, எனக்கு அப்படியொரு வாய்ப்பு இதுவரை அமையவில்லை என்று நடிகை ரம்யா நம்பீசன் கூறியுள்ளார்.
ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம், இளைஞன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன்.சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.
நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் “ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. என்னா ஷேப்பு..” என்று கோக்கு மாக்காக வர்ணித்து வருகிறார்கள்.