தமிழ் சினிமாவில் “காதல் தேசம்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தபு. அதனைத்தொடர்ந்து இவர், “இருவர்”,” தாயின் மணிக்கொடி”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “சினேகிதியே”, ” டேவிட்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.
47 வயதாகும் இவர் சிறந்த கதாபாத்திரங்களில் இன்னும் நடித்துக் கொண்டுதான் உள்ளார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷுட் தேவையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.