“மர்மமாக உள்ளது…” – “பீஸ்ட்” ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் – எதிர்ப்பை பதிவு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி.!

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு நேற்று ‘பீஸ்ட்’ என்ற தலைப்பை அறிவித்தார்கள். சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி வருவதற்கு முன்பு தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு கொடுத்து வந்தது. 

 

ஜிஎஸ்டி வரி அமலான பின்பு அந்த வரி விலக்கு கொடுக்கும் முறை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து பலரும் தமிழல்லாது வேற்று மொழித் தலைப்புகளை வைக்க ஆரம்பித்தார்கள். 

 

விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த “மாஸ்டர், பிகில், சர்க்கார், மெர்சல்’ எதுவுமே தமிழ் வார்த்தைகள் அல்ல. இப்போது அவரதுஅடுத்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று பெயர் வைத்திருக்கிறார். 

 

 

பலர் பேசும் போது ஆங்கில வார்த்தை கலப்புடன் பேசினாலும் இந்த ‘பீஸ்ட்’ வார்த்தை அதிகப் புழக்கத்திலும் இல்லை. தமிழை வளர்க்கிறோம், தமிழப் பாதுகாப்போம் என்று சொல்பவர்கள் தான் இப்படி அதிகமான தமிழ்ப் புறக்கணிப்பையும் செய்கிறார்கள் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் வருத்தப்படுகிறார்கள். 

 

 

தமிழில் பெயர் வைத்தால்தான் வரி விலக்கு என்பதை எல்லாம் மாநில அரசு மீண்டும் கொண்டு வரக் கூடாது என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். தமிழில் படங்களைத் தயாரிப்பவர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் அவர்களாகவே பொறுப்புடன் நடந்து கொண்டு தமிழில் மட்டுமே பெயர்களை வைக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

 

இந்த நிலையில், விஜய் தொடர்ந்து தனது படங்களுக்கு ஆங்கிலத்திலேயே தலைப்பு வைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

 

அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தொடர்ந்து ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்ன எனவும், தமிழ் மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *