“சாக்லேட் ப்யூட்டி.. காட்டு தேக்கு..” – கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – குவியுது லைக்ஸ்..!

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். 

 

‘காக்கா முட்டை’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்ததே அதற்கு சாட்சி. தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

 

 

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை கொண்டு வர போராடும் சாமானிய பெண்ணின் வலிகளை கண்முன் காட்டி மிரளவைத்தார். 

 

 

இதுவரை அதிரடியான படத்தில் நடிக்காமல் இருந்த இவர், முதல் முறையாக அதிரடியான ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. 

 

 

தற்போது முதன் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டராக விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் கடந்த ஜூலை 30ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், சாக்லேட் ப்யூட்டி.. காட்டு தேக்கு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *