கிளாமர் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகும் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்து வாயடைத்து போயுள்ளனர் ரசிகர்கள்.பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர்.
அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன்.
கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.
அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.