தேவதர்ஷினி தமிழ் சினிமாவின் ஒரு கொண்டாடப்படாத நாயகி என்றே கூறலாம். டிவி சீரியல் மர்ம தேசம் துவங்கி தற்போது 96 சினிமா வரை பல திரைப்படங்கள், டிவி சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இவருக்கு பார்த்திபன் கனவு படத்துக்காக சினிமா கலைஞர்களுக்கு தரப்படும் தமிழ்நாடு மாநில விருது சிறந்த நகைச்சுவை பாத்திரத்தில் நடித்ததற்கு கொடுக்கப்பட்டது.
நடிகை தேவதர்ஷினி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சி தொடர்களின் வழியாகவே புகழின் உச்சிக்கு சென்றவர். குணசித்திர, காமெடி வேடங்களுக்கு பெயர்போன அவர் அறிமுகமானது தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தான்.
இவரின் வாழ்க்கை பாடம் எல்லா நடிகைகளுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றுகிறார். நகைச்சுவை காமெடி நடிகராக தெரியும். இவர் ஒரு தொகுப்பாளினி இவரின் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சிறந்த நகைச்சுவை பாத்திரத்தில் நடித்ததற்கு விருது பெற்றிருக்கும் தேவதர்ஷினி தற்போது தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வாவ் என்று வாயை பிளந்துள்ளார்.