புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் சீரியலில் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார்.
சீரியல் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைய மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியை அடுத்து கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்கள் வரிசையாக இவரது நடிப்பில் வெளியாகின.
தற்போது கைவசம்மாக குருதி ஆட்டம் ,கசட தபற, வான் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்-2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால் ப்ரியா பவானி சங்கர் எந்த அளவிற்கு படத்தில் பிசியாக இருக்கிறாரோ அதே அளவிற்கு அவரது சமூகவலைதள பக்கத்திலும் பிசியாக உள்ளார்.
மற்ற நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கைவசம் பல படங்களை வைத்து சத்தமில்லாமல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
முதல் படமே ஏடாகூடமாக ஹிட்டடிக்க தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் ஐந்து மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது சினிமா படம் எடுப்பது குறைந்துவிட்டதால் அனைவரும் வெப்சீரிஸ் இல் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.
முதல் முறையாக இந்த வெப்சீரிஸ் மூலம் கிளாமரில் களமிறங்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் வெளியானவுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் அசால்டாக பிரியா பவானி சங்கர் ஜோடி போட போகிறார் என இப்போதே பேச்சுக்கள் எழுகின்றன.