விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். இவரது பூர்வீகம் கேரளா. ரம்யா நம்பீசன் நடித்துக் கொண்டே பல படங்களில் பாடல்களுக்கு பின்னணி பாடி வருகிறார்.
சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இதுவரை தான் நடித்த படங்களில் மட்டுமே டப்பிங் பேசி வந்தார் ரம்யா. தற்போது அதையும் தாண்டி இந்தியில் வெற்றி பெற்று தமிழில் ‘ராத்ரி’ என ரீமேக் ஆகும் ‘ராகினி எம்.எம்.எஸ்’ படத்தில் கவர்ச்சி புயல் சன்னி லியோனுக்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்தார்.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் பலரும், நடிப்பை அடுத்து தொழில் ரீதியாக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சில நடிகர்கள் தான் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா நம்பீசன், இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி ஒரு குறும்படத்தையும் இயக்க துவங்கியுள்ளார்.
அதன் பின்னர் ’ராமன் தேடிய சீதை’, ‘குள்ளநரிக்கூட்டம், ’பீட்சா’ ’சேதுபதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும் இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உதடுகள் பேசாததை கண்கள் பேசும்” என கூறி இவர் வெளியிட்டுள்ள சில க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.