தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்த தமன்னா, 2006 ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கல்லூரி படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகையானார். தெலுங்கிலும் நாக சைதன்யா, அல்லு அர்ஜூன், பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர் போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, பிஸியான நடிகையானார்.
விஜய் சேதுபதி, விக்ரம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நடித்த தமன்னா, தற்போது மீண்டும் தனுஷிற்கு ஜோடியாக நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தாக்குப்பிடிப்பேனா என்கிற அளவிற்கு முதல் இரண்டு வருடங்கள் பெரும் போராட்டமாக இருந்தது என்று சொல்லும் தமன்னா அதன்பின்பு முதல் இடத்தையே பிடித்ததுதான் சாதனை.
அழகு, கவர்ச்சி என்று இளமையை முதலில் முதலீட்டாக்கியவர். அதில் நல்ல அறுவடையைப் பார்த்ததும் பின்னர் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க தான் மறைத்து வைத்திருந்த திறமைகளை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்துவிட்டார். இன்று வரை இவரது பாய்ச்சல் குறையவில்லை.
அதிலும், சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடியாக நடித்த ஆக்ஷன் படத்தில் இதுவரை காட்டாத ஒட்டு மொத்த திறமையையும் காட்டி கதி கலங்க வைத்தார் அம்மணி.
இந்நிலையில், படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள அம்மணி அங்கே மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட் ஒன்றை அணிந்து கொண்டு படு சூடாக வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.