உடல் பயிற்சியில், யோகா போன்ற பயிற்சிகளால் உடலை செம்ம பிட்டாக வைத்திருக்கும் சமந்தா தற்போது அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி, பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைத்து போக செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.கடந்த சில நாட்களாக பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களுக்கு அடிக்ட் ஆனவர் போல கருப்பு வெள்ளை போஸ்ட்டாக போட்டு வருகிறார்.
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் வெப்சீரிஸ் என பிசியாக உள்ள நடிகை சமந்தா வெகுவிரைவாக 16 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் அடைய உள்ளார்.
15 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றதற்காக சமீபத்தில் தான் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட சமந்தா அதற்குள் மின்னல் வேகத்தில் 15.8 மில்லியன் ஃபாலோயர்களை சொந்தமாக்கி உள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஜக்கி வாசுதேவ் ஏற்பாடு செய்திருந்த ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சிவராத்திரி விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார்.
ரகுல் ப்ரீத் சிங், லக்ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பிரபலங்களுடன் சமந்தா எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.நடிப்பில் மட்டும் இன்று, பிட்னசிலும் அதிக அக்கறை கொண்ட இவர், கவர்ச்சியான பயிற்சி உடையில் தலைகீழாக தொங்கியபடி, பயிற்சி செய்த புகைப்படத்தை தற்போது சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பலரும் வியர்த்து பார்த்து வருகிறார்கள்.