தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கும் ஆச்சார்யா ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.
இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் காஜல் அகர்வால் கலந்துரையாடியபோது. ‘நான் எவ்வளவு காலம் நடிப்பேன் என்று தெரியாது.
எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி கூறினால் நடிப்பதை விட்டுவிடுவேன்’ என்றார். இதனால் காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகப்போகிறாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் புதிய இந்தி படமொன்றில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு உமா என்று பெயர் வைத்துள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படம்.
இதில் நடிப்பது குறித்து காஜல் அகர்வால் கூறும்போது, ‘சவாலான கதைகளில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறேன். உமா படத்திலும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும்’ என்றார்.
போர் அடிக்கும் போதெல்லாம் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். தற்போது காஜல் கணவர் கிச்சுலுவுடன் படிக்கட்டில் அமர்ந்தபடி ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், உடலோடு ஒட்டிய இறுக்கமான உடைகளில் தன்னுடைய உடல் வாகு தெரியும் படி சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சிதறடித்து வருகிறார்.