‘ஜெயம்’ தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சதா, அதே படத்தின் ரீமேக் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வந்தவர், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’, அஜித்தின் ‘திருப்பதி’ டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இதனால், தொடர்ந்து தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திய சதா, தெலுங்குத் திரைப்படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கினார்.
2007 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்திற்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப் படங்களிலும் நடிக்கதவர், மீண்டும் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘புலிவேஷம்’ படத்தில் நடித்தார்.
அதன் பிறகு மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்தவர், வடிவேலுக்கு ஜோடியாக ‘எலி’ படத்தில் நடித்தார். இப்படி மார்க்கெட் இழந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த சதா, 2018 ஆம் ஆண்டு வெளியான ‘டார்ச்லைட்’ என்ற தமிழ்ப் படத்தில் தொழில் செய்யும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது சின்னத்திரை நிகழ்சிகளில் தோன்றி வருகிறார்கள்.