“உன் மகள் தான் ஹீரோயின்.. ஆனா.. இதை பண்ணனும் – என் அம்மாவிடமே கேட்டாங்க..” – வெளிப்படையாக கூறிய நடிகை கல்யாணி..!

பிரபு தேவா லைலா நடித்த அள்ளித்தந்த வானம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. இவருடைய இயற்பெயர் பூர்ணிதா. 

 

கல்யாணி ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் ஹீரோயின் சதாவின் தங்கையாக நடித்தார். இந்த படம் மூலம் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கல்யாணி வளர்ந்த பிறகு, கத்திக்கப்பல், இளம்புயல், இன்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

 

சினிமாவில் பெரிய வெற்றி கிடைக்கா

த நிலையில், அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். அதன் பிறகு, சில தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளில் ஆங்கராகவும் பணியாற்றினார்.

 

பெரிய திரையில் நல்ல பெயரை சம்பாதித்து விட்டு சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய கல்யாணி விஜய் தொலைக்காட்சியில் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற தொடர்களின் லீட் ரோலில் கலக்கினார். 

 

 

இடையில் ஆங்கரிங் பணியையும் விட்டு வைக்கவில்லை.விஜய் டிவி, , ஜீ தமிழ் இரண்டிலும் கல்யாணி செம்ம பிஸி. தற்போது திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்ட கல்யாணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் சினிமாவில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கு காரணம் என்ன என்று கூறியுள்ளார். 

 

அவர் கூறும்போது, ‘சினிமாவில் இருந்து விலகியதற்குக் காரணம் என்னைத் தவறாகச் சிலர் பயன்படுத்தப் பார்த்தார்கள். படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட் மென்ட் அதாவது படுக்கைக்கு வரவேண்டும் என்று சில இயக்குனர்கள் கேட்டனர். 

அதனால்தான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். என் அம்மாவிற்கு போன் செய்து பெரிய ஹீரோ,
பெரிய ப்ரொட்யூசர் உங்கள் மகள் தான் ஹீரோயின். ஆனால், படத்தில் கதாநாயகியாக
நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட் மென்ட் அதாவது படுக்கைக்கு வரவேண்டும்
என்று சில இயக்குனர்கள் கேட்டனர். 

 

ஒரு டிவி சேனலில் இதுபோல் சம்பவம் நடந்தது என்றார். கல்யாணி இதுபோல் மீ டூ புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam