இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மனிஷா கொய்ராலா..! – வைரல் புகைப்படங்கள்..!

உயிரே, இந்தியன், முதல்வன் படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. சில ஆண்டுகளுக்கு முன்னர் கேன்சர் நோய்க்கு ஆட்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர். 

 

அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த அவர் கேன்சர் நோய்க்கான சிகிச்சையின் போது ஆறு மாத காலம் வரை ஒரு பூட்டிய அறைக்குள் தான் இருந்ததால் கொரோனா கால பேரிடர் சூழலும், ஊரடங்கு நாட்களையும் கடப்பது தனக்கு எளிது என தெரிவித்திருந்தார். 

 

மனிஷா, சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2012-ம் ஆண்டு அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் இதை விட மோசமான புயல்களை என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். ஒப்பீட்டளவில் இது எளிதாகவே இருக்கிறது. கரோனா தொற்று சூழல் என்னை அச்சுறுத்தவில்லை. நான் அமைதியாக இருக்கிறேன். 

 

தியானம் செய்கிறேன், யோகா செய்கிறேன். செடிகளுடன் நேரத்தைச் செலவிடுகிறேன். இயற்கையுடன் பேசுகிறேன். பல வருடங்களுக்குப் பின் மும்பையில் பறவைகளின் கீச்சுகள் கேட்கின்றன. 

 

எனது பெற்றோருடன் நேரம் செலவிடுகிறேன். இதற்கு முன் இவ்வளவு அமைதியை, சாந்தத்தை நான் உணர்ந்ததில்லை” என்று கூறியுள்ளார் மனிஷா கொய்ராலா. 

 

 

மனம் மற்றும் உடல் வலிமைக்காக தினமும் யோகா பயிற்சியை செய்து வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது கடினமான யோகா ஆசனங்களை செய்து அசத்தியுள்ள அவரை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? நிஜாமாவே நீங்க கிரேட் தான்.. இளம் நடிகைகளுக்கு நீங்கள் நல்ல முன்னுதாரணம் என்றுபுகழ்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam