1992 ஆம் ஆண்டு, ‘சின்ன தாயே’ படத்தின் மூலம் பொன்னம்மா என்கிற சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை விசித்ரா.
இதைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி நடித்த முத்து, விஜயுடன் ரசிகன், என பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து அனைத்து தமிழ் ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்ட நடிகையாகத் திகழ்ந்தார்.
முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்த இவர், கடைசியாக 2001ஆம் ஆண்டு கிருஷ்ணா கிருஷ்ணா என்கிற படத்தில் ருக்மிணியாக நடித்தார். அதன் பின்னர் இவர் வாழ்க்கையில் நடந்த கொடூர சம்பவம் இவரை திரையுலகை விட்டு தள்ளி வைத்து விட்டது என்றே கூறலாம்.
இவருடைய தந்தை, ஒரு சில திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக செய்திகள் அவ்வப்போது வெளியானது. அதற்கேற்றது போல் அவர் ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்திற்கு பின்னர் திருமணமாகி ஒரேயடியாக புனாவில் செட்டில் ஆனார் விசித்ரா. திருமணத்திற்குப் பின் இவர் பெரிதாக எந்த ஒரு சினிமா நிகழ்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.
திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தவில்லை. கணவர் குழந்தைகள் என பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறினார். நடிகை விசித்ரா எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து பல படங்களில் நடித்து சிறந்த குணசித்திர நடிகை என பெயர் பெற்றவர்.
நன்கு தமிழ் பேசத் தெரிந்த நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில், ஆளே மாறிப்போய் மிகவும் சிம்பிளாக காணப்பட்டார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.