தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘லாபம்’ படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி வெளிப்படையாகக் கருத்துக்களைப் பகிர்பவர் ஸ்ருதிஹாசன்.
இதற்கு முன்பு மைக்கேல் கோர்சேல் என்ற வெளிநாட்டவர் ஒருவரைக் காதலித்த போதும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அவரை விட்டுப் பிரிந்து தற்போது சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார் ஸ்ருதி. சில வாரங்களுக்கு முன்பு காதலரை சென்னைக்கு அழைத்து வந்து அப்பாவிடமும் அறிமுகம் செய்து வைத்தார் என்று செய்திகள் வந்தன. இந்த லாக்டவுனில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
அவருடன் இருக்கும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து, “என்னோட பாய் பெஸ்டியுடன் Locked Down” எனப் டபுள் மீனிங்கில் கருத்து கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவுக்கும் ஐந்து லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளார்கள்.
மேலும், என்னது பாய் பெஸ்டியா..? மஜா மஜா பா..! என்று ரசிகர்களும் தங்கள் பங்குக்கு டபுள் மீனிங்கில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.