தமிழ் சினிமா சினிமாவின் மறக்கமுடியாத இயக்குனர் “சேரன்” என்றே சொல்லலாம். இவர் இயக்கிய முதல் படத்தில் தனது முத்திரையை ஆழமாகப் பதித்து விட்டார்.
பாரதிராஜா வைப்போல் கிராமத்துப் பின்னணியில் படத்தை இயக்கும் ஆர்வம் கொண்ட இவர், கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றினார். மூன்றுமுறை தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் என்ற பெருமையையுடன் வளம் வரும் இயக்குனர் சேரன்.
சேரன், மதுரையில் உள்ள பழையூர்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை “பாண்டியன்” அங்கு உள்ள திரையரங்குகளில் ப்ரொஜெக்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
இதனாலேயே இவருக்கு சினிமா மேல் ஆர்வம் அதிகரித்தது. இவரின் தாய் பெயர் “கமலா”. இவர்களைப் பிரிந்து சென்னைக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார்.
உதவி இயக்குனராக சேரன்
ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை செய்து வந்த இவர் “புரியாத புதிர்” படத்தில் உதவி இயக்குனராகவும், “சேரன் பாண்டியன்” “நாட்டாமை” போன்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றினார்.
இயக்குனர் சேரன் கடைசியாக இயக்கிய படம் ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை‘. 1990களில் சிறந்த இயக்குனராக சேரன் திகழ்ந்தார். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்தன.முதன்முறையாக ‘சொல்ல மறந்த கதையில்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
ஆட்டோகிராஃப் போடும் ரேஞ்சுக்கு வளர்ச்சி
அந்தப் படம் அவருக்கு நடிப்பிற்கு பெயர் வாங்கித் தந்தது. அடுத்ததாக ‘ஆட்டோகிராப்’ படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது. பின்னர் அவர் இயக்குனர் தொழிலை விட நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். பின்னர் அவர் இயக்கிய படங்கள் எதுவும் ஓடவில்லை.
அதன் பின்னர் பல முயற்சிகளை எடுத்த சேரன் நீண்ட இடைவெளிக்கு பின் இப்போதைய காலகட்டத்திற்க்கு ஏற்ற கதை அமைத்து படம் இயக்குவதாக கூறி ஜே.கே எனும் நண்பணின் வாழ்க்கை படத்தினை இயக்கி முடித்தார். இந்தப் படமும் வியாபாரம் ஆகவில்லை.
பின்னர் டி2எச் என்ற நிறுவனத்தை துவங்கினார். 50 ரூபாயில் வீட்டிற்கே படத்தின் டிவிடிக்கள் வழங்கும் வகையில் திட்டங்களை உருவாக்கினார். அதுவும் சரியாக போகவில்லை. அதனால் அவருக்கு பல பிரச்னைகள் வந்தது. அதை சட்ட ரீதியாக சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேரன் சக போட்டியாளர் மீரா மிதுன் என்பவரால் சில பிரச்ச்னைகளை சந்திக்க நேர்ந்தது.ஆனால், பார்வையாளர்கள், ரசிகர்கள் எல்லோரும் சேரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
ஆஹா,,, சிக்கிட்டமா..
இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு சேரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏழு வருடம் கழித்து இப்போது “மிக்க நன்றி, தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது”: என்று கூறியுள்ளார். இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இந்த மீம்-ஐ பார்த்த சேரன், “ஆஹா,,, சிக்கிட்டமா.. சரி என்ஜாய் பண்ணுவோம்..” என்று பதில் கொடுத்துள்ளார். நல்ல வேளை, ஏழு வருஷம் கழித்து சொல்லாம விட்டாரே என்று பெருமூச்சு விடுகிறார்கள் ரசிகர்கள்.