பாக்யராஜ் மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இவர் விஜே துறையில் பிரபலமாக இருக்கும் கிகி எனச் செல்லமாக அழைக்கப்படும் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வப்போது ஏதாவது ஒரு வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.
இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும் . ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருப்பது, சமூகவலைத்தளங்களில் செல்ல சீண்டல் என ஹாட் ஜோடி இவர்கள்.
திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடபள்ளி ஒன்றை அமைத்து அதில் பிரபலங்களை கூப்பிட்டு மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.
இதை தவிர விருது விழா, இசை வெளியீடு விழா எல்லாம் தொகுத்து வருகிறார். தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவுக்கு ஆட்டம் போட்டுள்ள அவரது வீடியோ சுத்தி போடும் லெவலுக்கு உள்ளது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1M பாலோவர்களை பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.