நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் டாப் நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
மகாநடி திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடனும் ஜோடியாக நடிக்கவுள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் பெண்குயின் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் மட்டுமே இன்னும் அவர் அறிமுகமாகவில்லை.
மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷிற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அப்படத்தில் பிகினி உடையில் அவர் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதால்.. ஸ்ட்ரிக்டாக நோ சொல்லி விட்டாராம் அம்மணி… இதனால் இயக்குனர் தெறித்து ஓடி விட்டார் என கூறப்படுகிறது.