அடக்கொடுமைய… – விவரம் தெரியாமல் அதை சொல்லி “பல்பு” வாங்கிய கீர்த்தி சுரேஷ்..!

 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த தெலுங்கில் ரங் டே, Sarkaru Vaari Paata உள்ளிட்ட படங்களில் நடித்த வருகிறார். 

 

இந்நிலையில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் Om Raut என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அதிபுருஷ். ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சாய்ப் அலி கான் நடித்து வருகிறார். 

 

இந்நிலையில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட்டாக
பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று இணையத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. படங்கள், ஷூட்டிங் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 

பிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் இருந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்வது வரை சிட்டாக பறப்பார் அம்மணி. அந்த வகையில், வரலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகூறி பல்பு வாங்கியுள்ளார் அம்மணி.

 

 

நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாருடன் தமிழில் சண்டக் கோழி 2 மற்றும் சர்கார் என இரண்டு படங்களில் இணைந்து நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் உடன் இணைந்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, ஹேப்பி பர்த் டே வரு என வாழ்த்தி உள்ளார்.

 

கீர்த்தி சுரேஷின் வாழ்த்தை பார்த்த வரலக்‌ஷ்மி சரத்குமார், தேங்க்யூ செல்லம். ஆனால், எனக்கு மார்ச் 5ம் தேதி தான் பிறந்தநாள் என செம க்யூட்டாக போட்டுள்ள ரிப்ளை வைரலாகி வருகிறது. 

 

இன்னைக்கு விஷ் பண்ண எல்லாரும் மறக்காமல் வரும் 5ம் தேதி மீண்டும் வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல மறந்துடாதீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam