கோவை மாநகரை முழுமையாக மையப்படுத்தி அமைந்துள்ள கோவை தெற்கு தொகுதி, கடந்த 2007-ல் தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டதாகும். மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் இத்தொகுதியில் அதிகம் உள்ளன.
பழமை வாய்ந்த கோவை கோனியம்மன் கோயில், 130 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ‘விக்டோரியா’ அரங்கம் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகைப்பட்டறைகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், முக்கிய காய்கறி மார்க்கெட்டுகள் இத்தொகுதியில் உள்ளன. விஸ்வகர்மா, செட்டியார் சமூக மக்கள், பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
கவுண்டர், தேவர், ஜெயின் சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோரும் குறிப்பிட்ட சதவீதம் வசிக்கின்றனர். உக்கடம், கோட்டைமேடு, ஜி.எம்.நகர், வின்சென்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர்.
வேட்பாளரின் வெற்றி, தோல்வியில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். பெரும்பான்மையாக நடுத்தர மக்கள் இத்தொகுதியில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் வெளியிட்ட கணிப்பின் படி இந்த தொகுதியில் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார்.
புதிதாக கட்சி ஆரம்பித்து களம் கண்ட கமல்ஹாசன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள இந்த ஜோதிட கணிப்பை பார்த்த கமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.