தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் ட்ராப் ஆகிப்போனது. மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுள்ளார்.
ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ் தவிர மற்ற இரண்டு மொழிகளிலும் நடிப்புடன் கூடிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
படங்களில் மட்டுமல்லாது சில ஆங்கில இதழ்களின் அட்டை பக்கத்தில் கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஆங்கில இதழின் அட்டை பக்கத்தில் ஸ்ருதியின் கவர்ச்சி படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது… ”நடிகைகள் கவர்ச்சியை மட்டும் நம்பி சினிமாவில் நீடிக்க முடியாது.
கவர்ச்சியுடன் கூடிய திறமையும் வேண்டும். நான் கவர்ச்சியாக இருக்கிறேன், அதனால் எல்லோருக்கும் கவர்ச்சியாக தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சி தான்.
கவர்ச்சியில் ஒரு எல்லை வைத்திருக்கிறேன், அதை கண்டிப்பாக மீற மாட்டேன், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.