நடிகர் அஜித் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சோனா. அதனை தொடர்ந்து அதே ஆண்டு நடிகர் விஜய்யின் ஷாஜகான் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 2008-ம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக கவர்ச்சியில் அதகளம் காட்டினார் அம்மணி.
குசேலன் படத்திற்கு முன்பே சில தமிழ் படங்களில் சுழன்றடித்த இவர் நான் நமீதாவுக்கு போட்டி என்று ஓப்பனாக கூறினார். தமிழ் படங்களில் நடிகையாக வலம் வந்தவர் சோனா. ஒரு கட்டத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பையும் ஏற்று கவர்ச்சி ஆட்டம் போட்டார்.
சினிமா தவிற..
சினிமா நடிப்பு மட்டுமில்லாமல், சொந்தமாக வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்தார். அதில் போதிய வருமானம் இல்லை. இதனால், சினிமா பக்கம் வந்த இவருக்கு வாய்ப்புகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வரவில்லை.
இவருக்கு தற்போது வயது 41 வயது ஆகின்றது. என்ன தான் வயதான பெண் போல தோற்றமளித்தாலும், உடல் எடை அதிகமாக இருந்ததாலும் பல பட வாய்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது. தற்போதும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா.? என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
சின்ன வயசில் அந்த பழக்கம்
மேலும், பல நடிகைகள் சொல்லவே கூச்சப்படும் ஒரு விஷயம் குடிப்பழக்கம். ஆனால், சோனா சின்னவயதில் எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா ‘பச்சமாங்கா’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.
அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது. ‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
என்ன அப்படி சித்தரிக்க வேண்டாம்
என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்த பின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள். இந்த “பச்சை மாங்கா” படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார் என்று யோசித்து பாருங்கள்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார்.
பச்சமாங்கா திரைப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சோனா.