பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் “அழகிய அசுரா”, “பஞ்சாமிருதம்”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “ராஜதந்திரம்”, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் களமிறங்கி சக்கை போடு போட்டுகொண்டுள்ளார். தற்போது மோகன்லால் நடிக்கும் “பிக் ப்ரதர்” என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்.தமிழ் சினிமாவில் 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரெஜினா காசென்ரா.
அதனை தொடர்ந்து அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.அதனை தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், Mr.சந்திரமௌலி, சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை 15க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் பாலிவுட்டில் எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில், “மனோதத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன். இதனால் நமக்குத் தெரிந்த ஒருவரை எடைபோட முடிகிறது.
மேலும் அவரது நடத்தை, குணாதிசயங்கள் குறித்து நன்கு தெளிவு பெற முடியும். “ஒருவரின் நடத்தை குறித்து தெரிந்தாலே அவரது குணாதிசயத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்த வித்தை கைவசம் இருப்பதால் எனது கதாபாத்திரங்களை நன்கு உள்வாங்கி நடிக்க முடிகிறது. “இதனால் எனது நடிப்பை திரையில் மெருகேற்ற முடிகிறது,” என்கிறார் ரெஜினா.
தெலுங்கில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து சிலர் கேட்கிறார்களாம். கதைக்குத் தேவையென்றால் எப்படியும் நடிக்கத் தயார் என்பதே ரெஜினாவின் பதிலாக உள்ளது. “நான் நடிக்க வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடக்கத்தில் சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது. “எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன்.
“இப்போது சினிமாவில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். “அது எனது நிஜ வாழ்க்கையிலும் பயன் அளிப்பதாக உள்ளது,” என்கிறார் ரெஜினா.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், காட்டு குதிர.. கிளாமர் குயின்.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.