பாலிவுட்டிற்கு தாவும் நடிகை சதா..! – எடுபடுமா இந்த முடிவு..!

தமிழில் “ஜெயம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சதா. ‘போயா போ’ என்று ரசிகர்களை கவர்ந்தவர் அடுத்ததாக ஷங்கரின் பிரமாண்ட படமான அந்நியனில் நடித்தார்.

 

இதனைத் தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, எலி என பல படங்களில் நடித்து வந்தார். அஜித்துடன் கூட நாயகியாக நடித்த இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. 

 

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடுவராக வந்துகொண்டிருந்தவர். இவருக்கு ஒரு காலகட்டத்தில் தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை அதனால் ஹிந்தி, தெலுங்கு கன்னடம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்து சமீபத்தில்தான் இந்த படம் ரிலீஸ் ஆனது.

 

இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை ரித்விகா, தினேஷ்குமார், சுஜாதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் அதோ கதியாக இருந்து வருகிறார். 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam